தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல 22வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணி புரிந்த மிஷனெரிகளை நினைவு கூறும் பவனி நடந்தது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாக செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை வகித்தார். திருமண்டல நிர்வாக கமிட்டி உறுப்பினர் இம்மானுவேல் வான்ஸ்றக் ஜெபித்து பவனியை தொடங்கி வைத்தார். திருமண்டல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பவனி பன்னீர் குளத்தில் இருந்து புறப்பட்டு கிறிஸ்தியாநகரம் வரை 35 க்கும் மேற்பட்ட மிஷனெரிகளை நினைவு கூறும் வகையில் நடந்தது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுவாமியடியான் உபதேசியார் கல்லறைக்கு மலர் வளையம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சேகர தலைவர் ஞானசிங் எட்வின், பள்ளி தாளாளர் செல்வின், ஓய்வு பெற்ற முன்னாள் மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஆனந்த ஜோதிபாலன், அருள்மணி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயர், கனம் தாமஸ் பிரதர்டன், அனி பிரதர்டன், அனி கேமர் ஆகியோர் கல்லறைக்கு மலர் வளையம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.
இதில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப், மெஞ்ஞானபுரம் ஜான் தாமஸ் சபை மன்ற தலைவர் டேனியல் எட்வின், சாயர்புரம் போப் சபை மன்ற தலைவர் டேவிட்ராஜ், தாவீது சுந்தரனார் சபை மன்ற தலைவர் அகஸ்டின் கோயில்ராஜ், திருமண்டல தொடர்பு துறை செயலர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குனர் ஜான் சாமுவேல், ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குனர் ராபின்சன், நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம், குருமார்கள் தனசேகர் ராஜா, டேவிட் ஞானையா, சாமுவேல், செல்வன் மகாராஜா, ஆசீர் சாமுவேல், ஆல்வின், ஆபிரகாம் ரஞ்சித், மற்றும் திருமண்டல குருமார்கள், சபை மூப்பர்கள், அனைத்து சபை மக்கள், ஆசிரியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.


