நெல்லையில் அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திர மூர்த்திக்கு நடந்த பாராட்டு விழாவில் சமய நல்லிணக்கத்தின் தூதுவன் என்ற விருது வழங்கப்பட்டது.
நெல்லை தீபம் அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை பாலபாக்யா மினி ஹாலில் திரைப்பட இயக்குனர் மந்திர மூர்த்திக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ண தாசன் தலைமை வகித்தார். நெல்லை முத்தமிழ் வரவேற்றார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் எம்.எம்.தீன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, திரைப்பட திறனாய்வாளர் காஞ்சனை மணி, த.-மு.எ.க.ச மணிமாறன், மூத்த எழுத்தாளர் திவான் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் எழுத்தாளர் வண்ணதாசன் தலைமை உரை ஆற்றினார். இயக்குனர் மந்திர மூர்த்தி ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் சமய நல்லிணக்கத்தின் தூதுவன் என்ற விருது திரைப்பட இயக்குனர் மந்திர மூர்த்திக்கு எழுத்தாளர் வண்ண தாசன் வழங்கினார். மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொடர்பியல் துறையின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கா.அபிஷ் விக்னேஷ் எழுதிய அக்னியின் காந்தம் எனும் சிறுகதை தொகுப்பு நூலை இயக்குனர் மந்திர மூர்த்தி வெளியிட எழுத்தாளர் வண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்டம் தோரண மலையில் இருந்து கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன் கோயில் பிரசாதம் கொடுத்து வாழ்த்தினார். சென்னை வாழ் நெல்லை சங்க பொதுச்செயலாளர் சங்கர்மணி, எஸ்.டி.பி.கே கட்சியை சேர்ந்த கனி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி விசுவல் கம்னியூசேன் துறை தலைவி ஜோஸ்பின் பாபா, எழுத்தாளர் தாணப்பன் கதிர், கவிஞர் கிருஷி, கவிஞர் சுப்பையா, கவிஞர் சுப்ரா, குறும்படஇயக்குனர் சிகாமணி, மக்கள் நீதி மையம் செந்தில், திராவிடர் கழகம் ராஜேந்திரன், கார்த்தி, இந்து கல்லூரி தமிழ் துறை போராசிரியர் இலக்குவன், புனித சவேரியார் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ஜோசப் ராஜ், முனைவர் கந்தசுப்பு, கவிஞர் பிரபு, வானொலி அறிவிப்பாளர்கள் பார்வதி முத்தமிழ், தேவி மாரி முத்து, கிருஷ்ண குமார், இயக்குனர் தேவசேனாதிபதி, சிவாஜி முருகேசன், புரட்சி அறக்கட்டளை சரவணன், நெல்லை ஏ.வி.கே. ரமேஷ், நஞ்கூரம் அமைப்பினர், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தீபம் அற்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நெல்லை முத்தமிழ், எழுத்தாளர் எம்.எம். தீன் ஆகியோர் செய்திருந்தனர்.


