தூத்துக்குடியில் அண்ணாவின் 118வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அண்ணா 118வது பிறந்தநாளையொட்டி புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், கவிதாதேவி, நாகராஜன், அருணாதேவி, அருண்குமார், ராமர், பிரபு, ஜேசையா, நிக்கோலாஸ்மணி, ஜேசையா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மாநகர அணி நிர்வாகிகள் முருகஇசக்கி, சாரதி, நைஸ் பரமசிவம், ஆனந்தசேகர், வக்கீல்கள் ரூபராஜா, நாகராஜன்பாபு, செய்யது காசிம், சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் இபி கருப்பசாமி, வேல்முருக உள்பட பலர் கலந்து கொண்டனர்.


