79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கருங்குளம் அருகேயுள்ள தாதன்குளத்தில் கிராம சபை கூட்டம் இன்று (15.08.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பஞ்சாயத்து செயலாளர் திரு.ஹரிஹர சுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவலர் திரு.வி.வீரப்பெருமாள், கருங்குளம் வட்டார ஊரக வளர்ச்சி துறை ஊரக நல அலுவலர் திருமதி.சபியா பர்வீன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இந்த கிராம சபை கூட்டத்தில் காசநோய் இல்லா தூத்துக்குடி மாவட்டம் உருவாக காசநோய் எதிர்ப்பு உறுதிமொழியை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் வாசிக்க அதனை தொடர்ந்து அனைவரும் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.
கிராம சபை கூட்டத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பாளர் திரு.சொரிமுத்து மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


