ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி நடந்தது. இதில் முறப்பநாடு புதுக்கிராமம், கீழப்புத்தனேரி, முறப்பநாடு கோவில்பத்து, வசவப்புரம், செக்காரக்குடி பகுதி 1 பகுதி 2, வடக்கு காரசேரி , தெய்வசெயல்புரம் கிராமங்களில் பொது மக்களிடம் கோரிக்கை மனுவாக பெறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆலந்தா கிராமத்தில் ஆதி திராவிட நத்தம் பட்டா 20 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதன் மதிப்பு ரூபாய் 60,000 ஆகும். இந்த பட்டாவை தனி மாவட்ட வருவாய் அலுவலர்( நெடுஞ்சாலை துறை) லோடேரிட்டா வழங்கினார். அருகில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னசங்கர், சமூக நலத்திட்ட தாசில்தார் லிங்க ராஜ், மண்டல துணை வட்டாச்சியர் தனுஷ்கோடி, தலைமையிடத்து தாசில்தார் லோகநாதன், வட்ட வழங்கல் அதிகாரி சகிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


