செய்துங்கநல்லூர் புனித லூசியா நடுநிலைப்பள்ளி ஆசிரியை சின்னராணி பதவி ஓய்வு பெற்றார். இவருக்கு பிரிவு உபச்சார விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பங்குதந்தை அருட்திரு ஜாக்சன் அருள் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரிகள் செய்துங்கநல்லூர் ரமணிபாய், கருங்குளம் ரெஜினா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மிக்கேல் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆசிரியை விக்டோரியா, சந்திரா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆசிரியை சின்ன ராணி ஏற்புரை வழங்கினார்.


