தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஊர் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பு இளைஞர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், சாத்தான்குளம் அருகேயுள்ள சாஸ்தாவிநல்லூரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் வெற்றிவேல் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கையில் மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் வைத்திருந்த மனுவில், “என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதார்கள். எனது தாயை மகளிர் குழுவில் இருந்து நீக்கி விட்டார்கள். வீட்டின் குடிநீர் இணைப்பை உடைத்து விட்டார்கள். இது தொடர்பாக ஊர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


