Passenger train in the Countryside near Pune India.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கி இருப்பதன் காரணமாக 5 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம். ரயில்வே அறிவிப்பு.
திருநெல்வேலி மற்றும் மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61 ஆயிரம் கன அடி நீரும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து சுமார் 54,000 கன அடி நீரும் ஓரம்பள்ளத்திலிருந்து உப்பாற்று ஓடையில் சுமார் 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மற்றும் மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61 ஆயிரம் கன அடி நீரும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து சுமார் 54,000 கன அடி நீரும் ஓரம்பள்ளத்திலிருந்து உப்பாற்று ஓடையில் சுமார் 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையிலும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக தூத்துக்குடியில் இருந்து 5 ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாலை 5.15 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ், இரவு 8.-25 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி சென்னை பெர்ல் சிட்டி எக்ஸ்பிரஸ், இரவு 10 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ், இரவு 10.50 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு பதிலாக மீலவட்டான் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் தூத்துக்குடி- திருநெல்வேலி, தூத்துக்குடி -வாஞ்சி மணியாச்சி மற்றும் வாஞ்சி மணியாச்சி -தூத்துக்குடி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


