சமீரா ரெட்டி (14 டிசம்பர் 1978) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்னும் இடத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் சமீரா ரெட்டி பிறந்தார். அவரது தந்தை போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார், அவரது தாயார் நட்சத்திரா ரெட்டி குடும்பத்தலைவி ஆவார். அவருக்கு மேக்னா ரெட்டி, சுஷ்மா ரெட்டி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் மும்பை நகரின் மஹிம் என்னுமிடத்தில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சிடென்ஹெம் கல்லூரியில் பட்டம் பெற்றார்.21-01-2014 அன்று அக்ஷய் வர்டே என்ற தொழில் அதிபரை மணம் புரிந்தார்.
பாலிவுட் திரைப்படங்களைத் தவிர அவர் சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் தோன்றினார். பெரு வெற்றி பெற்ற தமிழ் திரைப்படமான கௌதம் மேனன் இயக்கி வெளி வந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் சமீரா நடித்தார். சமீராவின் நடிப்பு மற்றும் தன்னம்பிக்கை கொண்ட அடக்கமான நடைமுறை பெண்ணான மேக்னா என்ற கதாபாத்திரத்தின் சித்தரிப்பு அவருக்கு பாராட்டும்படியான விமர்சனங்களைப் பெற்றுத்தந்தது.


