ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி ரெங்கராஜ திருமண மண்டபத்தில் பெட்டிசன் மேளா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் உள்ள ரெங்கராஜ திருமண மண்டபத்தில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல்துறை சார்பில் மாபெரும் பெட்டிசன் மேளா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி மனு அளித்தனர். இதில் 63 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 58 மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன், மேரி ஜெமிதா உள்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


