
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெற்றுவந்த 13 போ் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 417ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவந்த 13 போ் குணமடைந்தனர். இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 917ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை 409 போ் உயிரிழந்துள்ளனர். தற்போது 91 போ் சிகிச்சையில் உள்ளனர்.