சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்பட்டி மேட்டுதெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி கவிதா (25) என்பவர் பாலியல் தொந்தரவு செய்தும், அதே சிறுமியை தூத்துக்குடி பூபாண்டியபுரத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் தங்கதுரை (41) என்பவர் பாலியல் வன்கொடுமையும் செய்த வழக்கில் மேற்படி இருவரையும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று குற்றவாளி கவிதா என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5,000 அபராதமும், குற்றவாளி தங்கதுரைக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000/- அபராதமும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ஜேசுராஜ்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
Continue Reading
Next: ஒருசோத்தம்மன் அய்யா என்னிடம் வந்தார். முதன் முதலாக சுந்தரம் அய்யா அவர்கள் அகத்தியர் சிலை நிறுவிய இடத்தைக் காட்டினார். அதிலதான் அகத்தியா பாதம் உள்ளது. தற்போது அந்தச் சிலை காணாமல் போய்விட்டது. அதன் பின் நெய்யாற்று கரை விஷவ தேவனாந்த சுவாமிகள் அவர்கள் பிரதிஷ்டை செய்த இடத்தைக் காட்டினார் அதிலும் தற்போது அகத்தியர் சிலை இல்லை ஆனால், அகத்தியருக்காக பக்தர்கள் கொண்டுவந்த மரக்காலணிகள் உள்பட பல பூஜை பொருள்கள் அந்தப்பீடத்தில் காணப்பட்டன தற்போது கேரள அரசு ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவந்து பிரதிஷ்டை செயத அகத்தியா சிலைதான் சுமபீரமாக உள்ளது. இந்த இடம் ஏதோ சிறு பூஜை வழிபாடுபோல உள்ளது. அகத்தியப பெருமான் ஏகாந்த நிலையில் உள்ளார். அவருக்குக் கூரைகூட ஏதோ தகரத்தில்தான் போட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதிகை மலையில் அரசாட்சி செய்யும் அகத்தியரின் கம்பிரம் அவரது மகிமையை நமக்கு உரைக்கும் வண்ணம் இருக்கிறது. தமிழக அரசும் கேரள அரசும் பேச்சுவார்த்தை நடத்தி, அகத்தியருக்கு ஒரு சிறப்பான மண்டபம் கட்டியே ஆகவேண்டும். எப்படி இருந்தாலும், பொதிகை மலை உச்சியில் அகத்தியர் முன்பு நின்றவுடன் ஒரு வைபரேசன் நமது உடலில் மின்அதிர்வு போலவந்துசெல்கிறது அந்த வைப்ரேசன் நமது உடலையும், மனதையும் அப்படியே ஒரு ஏகாந்த நிலைக்குக் கொண்டுசென்றுவிடுகிறது. இந்தப பொதிகை மலையைத்தான் ‘பூலோக கைலாயம் என்று றுகிறார்கள் பொதிகை மலை உச்சியை ஏஃபொதிகை என்கிறோம். பொதிகை மலையின் உச்சியில் இருந்து பார்த்தால், அகத்திய மாமுனியின் ஜெய மாலையாக ஒரு பக்கம் தாமிரபரணியாகவும். மறுபக்கம் நெய்யாறாகவும் தண்ணீர் பாய்கிறது. ஒருசமயம், வல்லநாடு சித்தர் தனது சிஷ்யர்களுடன் பொதிகை மலை யாத்திரை வந்திருந்தார் அவர் பூங்குளம் வழியாக பொதிகை மலை வந்தார். அப்போது பொதிகை மலையில் வெள்ளை யானை உள்ளது என்றும். அதை குறிப்பிட்ட காலம் வரும்போது உங்களுக்கெல்லாம் காட்டுவேன் என்றும் கூறினார் ஒரு குறிப்பிட்டக் காலத்தில் மீண்டும் 25 பேருடன் பொதிகை சென்றுள்ளார் ஏசுபொதிகையில் அகத்தியப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வெள்ளை யானையை வரவழைத்துக் காட்டினார் அவரோடு சிஷ்யராக இருந்த ணேசன் என்பவர் எமக்கு வல்லநாட்டில் உள்ள சித்தர் பீடத்தில் வைத்து இந்தத் தகவலைக் கூறினார் வெள்ளை யானை உள்ள இடம் என்றால், பூலோக கைலாயம்தானே. பொதிகை மலைக்கும் அப்படி ஒரு சிறப்பு இருக்கிறது.பொதிகை மலையில் நின்று பார்த்தால் கிழக்கே மற்றுமொரு அம்சத்தில் பாபநாசம் அணை நமக்குத் தெரிகிறது. பூங்குளத்தில் தாமிரபரணி தோன்றும் இடம் ஒரு குளமாக நமக்குத் தென்படுகிறது. மலை உச்சியில் எல்லா தேரத்திலும் எல்லா காட்சிகளும் தெரியாது. வருடத்துக்கு வருடம் நேரத்துக்கு நேரம் நிமிடத்துக்கு நிமிடம் மாயாஜாலம் காட்டுவதுதான் பொதிகை மலை பொதிகை மலையில் இருந்து பார்த்தால், ஒரு புறம் திருவனந்தபுரம் ‘லைட் ஹவுஸ் மறுபுறம் தூத்துக்குடி லைட் ஹவுஸ் ஆகியவை தெரியும். அந்த அளவுக்கு உயரமான இடம் பொதிகை! பூஜைக்கான பொருட்களை பகதர்கள் நிறைய கொண்டு வந்திருந்தனர். ஒரு பக்கம் பிரசாதம் தயாரிக்கும் வேலை வேகமாக நடந்தது அதில் ஒரு விசேஷம் எங்கள் ஊர் அருகில் உள்ள வெள்ளூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி திரு மாசான முத்து அவர்கள் அங்கே வந்திருந்தார் அவர் அ அகத்தியருக்கு பூஜை செய்தார் ஆகா. எவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி மிகவும் பிஸியாக இருக்கக் கூடியவர், அவர் அகத்தியரைப் பார்க்க இங்கே வந்திருக்கிறார் என்றால்.. அகத்தியா அருளை எண்ணி எண்ணி வியந்தேன் அதுமட்டுமல்லாமல், புருசோத்தமன அய்யா பூஜை செய்யும் போது ஒரு நெகிழ்ச்சியான விஷயம் நடந்தது. ஒருவர் கடவுளை வேண்டி தனது தெருவில் உள்ள கோயிலுக்குச் சென்றால்கூட என்பத்தை நன்றாக வைத்துக்கொன என் தொழிலை நன்றாக ந்து என் பையனுக்கு அரசு வேலை வேண்டும். எனக்கு நீரவேண்டும் எனக்கு நிறைய சொத்து சேர வேண்டும்? சுறுதான் சுயநலத்துடன் கடவுளை வணங்குவார்கள் னால்,கிமீ தூரம் கரடுமுரடான முட்டு ஏத்ததில் இது வந்த இவர், அகத்தியரிடம் வைத்த கோரிக்கை என்ன உகத்தியப் பெருமானே! தாமிரபரணியை வற்றாத ஜீவநதியாக உமது கமண்டலத்தில் இருந்து இந்த வருடமும் தண்ணீச் வேண்டுமர் பஞ்சத்தில் இருந்து மக்களனைக் காப்பாற்றுங்கள மனம் உருகிக் கேட்டார் மிரபரணி வற்றாத ஜீவநதியாக இருந்தால், எங்களுக்கு தட்டுப்பாடாக இருக்காது தொழிற்சாலைகள் நன்றாக மக்கள் நன்றாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் நன்றாக நடக்கும் மக்களுக்கு குடிதண்ணீர் தடையின்றிக் எனவே, எங்கள் தாமிரபரணியை வற்றாத ஜீவநதியாக வேண்டும் என்று பூஜை செய்தார் அதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் அடைந்தோம்.