தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 10.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி முதல் தற்போது வரை 415 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையும், 52 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான வாசிப்பாளா் உதவித்தொகையும், 22 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 6,367 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 55 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 12 பயனாளிகளுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்களும், 90 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், 7,112 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 100 பயனாளிகளுக்கு செவித்திறன் கருவியும், 52 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும், 25 பயனாளிகளுக்கு மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நாற்காலியும், 50 பயனாளிகளுக்கு தாங்கிகளும், 50 பயனாளிகளுக்கு கருப்பு கண்ணாடியும், மத்திய அரசு நிறுவனம் மூலம் 835 பயனாளிகளுக்கு ரூ. 63 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களும் என மொத்தம் 15,182 பயனாளிகளுக்கு ரூ.10.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தார்.


