விளாத்திகுளத்தில் பாஜக சார்பில் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் முன்பு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் வடக்கு ஒன்றிய தலைவர் காட்டு ராஜா தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்டத் தலைவர் சரவணன் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் பிரச்சார பிரிவு லட்சுமண குமார் சிறப்பு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் போத்தீஸ் ராமமூர்த்தி, முன்னாள் ஒன்றிய தலைவர் கனகவேல் ராஜ், மாவட்டத் துணைத் தலைவர் சேது ராஜ்,மாவட்டச் செயலாளர்கள் அமுதா கணேசன்,சக்தி குமார், மாவட்டத் தலைவர் அரசு தொடர்பு பிரிவு கந்தசாமி, மாவட்டத் தலைவர் பிறமொழி பிரிவு முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் அணி மற்றும் பிரிவு ஒன்றிய தலைவர்கள் கிளைத் தலைவர்கள் காவி சொந்தங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


