நாலுமாவடி புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி புது வாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை சார்பில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் வருகிற 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 முதல், மாலை 3:00 மணிவரை நடைபெற உள்ளது.
சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சந்திரக்குமார், (இருதய நோய் மருத்துவர்), கெவின், (பொது மருத்துவர்), ஷெக்கினா, (குழந்தைகள் நல மருத்துவர்), டேனியல்ராஜ் (குழந்தைகள் நல மருத்துவர்), ஷெரின் ஜானகி, (பொது மருத்துவர்), கிப்ட் நார்மன் (சமூக நல மருத்துவர், ஜெயசுதா மகப்பேறு மருத்துவர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர்.
இந்த முகாமில் கண், பல், காது சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கான தொலைபேசி எண் : 04639-350000 முன்.பதிவுக்கான இணையதள முகவரி: https://nlmsmh.org/mega-free-medical-camp. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அன்புராஜன், விமல் ஜோசப் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


