இந்த சமூகத்தினரை பற்றி முகநூலில் வந்த பதிவு தான் இது. அதைத்தான் இந்த இடத்தில் பதிவு செய்துள்ளோம். மேலும் சாதியை பற்றியே , அவர்கள் மனம் புண்படுத்த வேண்டும் என்றோ நாம் பதிவு செய்யவில்லை. ஆனால் இந்த பதிவில் சில தகவல்கள் உள்ளன. எனவே இவ்விடத்தில் இதை பதிவு செய்துள்ளோம் – வணக்கம் ஸ்ரீவை
அந்தக் காலத்தில் சில நாட்களுக்கு ஒருமுறை வண்ணார் வீடு வீடாக வந்து ‘அழுக்கு’ எடுத்துக்கொண்டு போவார்கள்.
துணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி..
.
கழுதை மேல் சுமத்தி குளத்துக்கோ.. கால்வாய்க்கோ..
ஆற்றுக்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவார்கள்..
.
சவக்காரம் போட்டு..
உவர் மண் போட்டு வெள்ளாவி வைத்து வெளுத்து.. வெள்ளைத் துணிகளுக்கு நீலம் முக்கி.. வெயிலில் காயப்போட்டு..
.
எல்லா ஜாதி மதத்துக்காரர் துணிகளையும் அள்ளிக் கட்டி கழுதைமேல் வைத்து வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவார்கள்..
.
அதன் பின் அந்தந்த வீட்டுத் துணிகளை அவற்றில் தான் சோரங்கொட்டை சாற்றால் தயாரித்த..
.
‘வண்ணார் மை’யைக் கொண்டு போட்ட குறியைப் பார்த்து
(ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாக குறியீடு போடுவதற்கே ஒரு தனி கோர்ஸ்
நடத்தலாம்) தனித் தனியாக பிரித்து.
.
#முதல்_password ????
இஸ்திரி போட்டு.. கட்டி.. வீடுகளுக்குப் போய் கொடுப்பார்கள்..
.
அதிலும் சில துணிகள் வீடு மாறி போனாலும்..
முத்தம்மா இது கவுண்டர் சட்டை..
இது நம்ம தேவர் துணி என்று திருப்பி அனுப்புவதும் உண்டு..
.
இதற்குக் கூலியாக சில வீடுகளில் காசு கொடுப்பார்கள்.. சிலர் தானியம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் விளைச்சலில் இருந்து நெல்.. சோளம், பயறு வகைகளை கொடுப்பார்கள்..
.
அந்தக் காலத்தில் கொலைக் குற்றவாளிகள்.. கொலை செய்யப்பட்டவர்கள்..
விபத்தில் இறந்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காண..
அவர்கள் அணிந்திருக்கும் துணிகளில் இருந்த ‘வண்ணான் குறி’ பயன்பட்டது..
.
வீடுகளில் ‘வண்ணார் கணக்கு’ எழுதுவதற்கென்றே பழைய நோட்டு ஒன்னு இருக்கும்..
.
வெள்ளாவி வைத்து வெளுத்த துணிகளுக்கு ஒரு தனி வாசனை உண்டு..
.
புது புத்தகங்களை உள் பக்கத்தில் முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் ரம்மியமான உணர்வு வெளுத்த துணியை உடுத்திருக்கும்போதும் கிடைக்கும்…
.
இப்போது அந்த வாசனையை இழந்துவிட்டோம்..
.
வீட்டில் சுக துக்கம் எது நடந்தாலும் முதல் ஆளாக இருப்பது நம் வண்ணார்கள் தான்..
.
சில திருமணங்கள் இவர்கள் பார்த்து தான் முடிந்திருக்கும்..
.
பல வருட பகையும் தீர்த்து வைக்கும் நாட்டாமையும் இவர்கள் தான்..
.
அந்த வீட்டில் கொடுத்த திண்பன்டங்களை இந்த வீட்டு குழந்தை பெரியோர்களுக்கு கொடுக்கும் பேருபகாரிகள்..
.
முக்கியமான விஷயம்..
எப்பேர்ப்பட்ட கோடீஸ்வர
குழந்தைக்கும் முதல் சோறே வண்ணாத்தி பாத்திர சோறு தான்..
.
இதையெல்லாம் தாண்டி..
முத்தாய்ப்பாக..
அந்தந்த ஊர் பெரியவர்கள் வண்டி பூட்டி கிளம்பும்போது..
.
அந்த வீட்டு வண்ணார் தான் தோளில் போடும் துண்டை பெரியவர் கையில் கொடுப்பார்..
.
வெளுக்க வைத்து வெளுக்க வைத்து
வெள்ளை மனம் படைத்த மனிதர்+அவரிடம் துண்டு வாங்கி போட்டு சென்றால் அதிர்ஷ்டம்..
காரிய ஜெயம் என்று ஏட்டில் எழுதாத நம்பிக்கை..!
.
ஒரு வீட்டில் துக்கம் என்றால் உறவுகள் மற்றும் ஊருக்கு தகவல் சொல்ல இவர்தான் அந்தக் கால Messenger.


