பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (நவம்பர் 13, 1935) இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி.தென்னிந்தியாவின் “இசைக்குயில்” என்றும் “மெல்லிசை அரசி”என்றும் அழைக்கப்படும் பி.சுசீலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் இசையரசி எனவும் “கான கோகிலா” எனவும் மற்றும் “கான சரஸ்வதி” என்றும் அழைக்கப்படுகிறார்.
சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முகுந்தராவ், சரசம்மா ஆகியோருக்கு பிறந்தார். சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர்.இவரது தந்தை ஒரு வழக்குறைஞராக இருந்தார். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.
28 ஜனவரி 2016 அன்று சரிபார்க்கப்பட்டபடி, 1960 களில் இருந்து ஆறு இந்திய மொழிகளில் 17,695 தனி, டூயட் மற்றும் கோரஸ் ஆதரவு பாடல்களை சுசீலா பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, சில இழந்த ஆரம்ப பதிவு செய்த பாடல்களை கணக்கிடவில்லை. இந்திய மொழிகளில் பெரும்பாலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய இரண்டிலும் இப்போது அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.


