தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சி போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் திமுகவில் கலைஞரின் முரட்டு பக்தனாக இருந்து எனது தந்தையார் 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தொழிலாளர்கள் நலன் மட்டுமின்றி திமுகவின் வளர்ச்சிக்கும் பணியாற்றியது மட்டுமின்றி ஓவ்வொரு ஆண்டும்.
உப்பள அதிபர்களுடன் இணக்கமாக பேசி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வும் பெற்று கொடுத்தார் அவரது மறைவிற்கு பின்பு பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் வேண்டுகோளின்படி அப்பணியை தொடர்ந்து பொறுப்பேற்று செய்து வருகிறேன்.
மாநகரின் அடையாளமும் பிரதான தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தாங்கள் சிறு சிறுக சேமித்த பணத்தை சங்கத்தின் பொது செயலாளர் என்ற முறையில் அவர்களுக்கு போனஸாக வழங்கி வருகிறேன் உங்கள் தலைமுறைக்கு பின்னர் வரும் குடும்ப உறுப்பினர்கள் திமுகவிற்கும் தளபதியாருக்கும் துணையாக இருக்க வேண்டும். திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இருகண்கள் என்று பேசினார்.
இதில், சங்கத்தின் பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட திமுக பொருளாளர் ரவீந்திரன், பொது குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், பகுதி சபா உறுப்பினர் ஐசக், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


