கோவில்பட்டியில் வந்தேபாரத் ரயிலுக்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சருக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
சென்னை-நெல்லை வந்தேபாரத் ரயில் கடந்த 9ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் நின்று செல்கிறது. இதற்கு ரயில்வே மந்திரியிடம் பரிந்துரை செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சந்தித்து பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.
மேலும், கோவில்பட்டி தொகுதி செட்டிக்குறிச்சி, மணியாச்சியில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி தேசிய வங்கி கிளை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய நிதிமந்திரி உறுதியளித்ததாக, எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.


