1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.
1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: புதிய இத்தாலிய அரசு ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.
1953 – இலங்கைப் பிரதமர் பதவியை டட்லி சேனநாயக்கா துறந்தார்.
1970 – பிஜி ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1972 – மொஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – உருகுவாய் விமானம் ஒன்று ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் இடையில் அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
1976 – பொலீவியாவைச் சேர்ந்த போயிங் சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் உட்பட 100 கொல்லப்பட்டனர்.
1990 – சிரியப் படைகள் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது.


