ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு வங்கியில் இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வங்கியின் மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் நெல்லை ராஜகோபால புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீதரன் (52), என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் அனைத்து பணியாளர்கள் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார். இன்று மதியம் 2 மணியளவில் ஊழியர்கள் மதிய உணவிற்கு சென்றுவிட்டனர்.
மேலாளர் ஸ்ரீதரன் தனது கேபினில் இருந்துள்ளார். அப்போது திடீரென இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மேலாளர் ஸ்ரீதர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


