சாத்தான்குளம் அருகே நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த ஜெரி. இவரது மகன் ஜெட்டா (17), 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தந்தை ஜெரி வெளிநாட்டில் வேளை செய்து வருகிறார். ஜெட்டா நேற்று தனது நண்பர்களுடன் இடைச்சிவிளை அருகே உள்ள தனியார் கல்லூரி நீச்சல் குளத்திற்கு குளிக்கச் சென்றார். குளத்தில் குளிக்கும் பொழுது ஜெட்டா திடீரென மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


