கோவில்பட்டி சொன்னா கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டில் இருமுறை வரும் பூஜ்ய நிழல் தினம் அல்லது நிழல் இல்லா நாள் எவ்வாறு ஏற்படுகிறது.
இதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் தரும் நிகழ்ச்சி க்கு கோவில்பட்டி அஸ்ட்ரோ க்ளப் தலைவர் முத்துமுருகன் தலைமை தாங்கினார். நர்சிங் கல்லூரி முதல்வர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி அஸ்ட்ரோ க்ளப் ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் சம்பத்சாமுவேல் இந்திய நேரப்படி நன்பகலுக்கும் கோவில்பட்டியில் உள்ளூர் நன்பகல் நேரமான 12.19நி. எவ்வாறு ஏற்படுகிறது என்பதை செயல் விளக்கம் அளித்தார்.
டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் முத்துசாமி இந்த நிழலைக் கொண்டு இரு வேறு இடங்களில் நிழலின் அளவினை குறித்து அறிவியல் அறிஞர் ஏரடோஸ்தனீஸ் புவியின் சுற்றளவை நிருபித்தார் என விளக்கினார்.
நாம் ஏன் அறிவியல் மனப்பான்மை பரப்பிட ,வளர்த்திட அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்


