உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளயனே வெளியேறு இயக்கம் போன்ற அனைத்திலும் தூத்துக்குடிமாவட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பு அதிகமாக இருந்தது. 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு முழக்கம் நாடு முழு வதும் ஒலித்தது. அப்போது தூத்துக்குடியில் 2 கள்ளுக்கடைகளும், திருச்செந்தூர் தாலுகா பூச்சிக்காட்டில் ஒரு கள்ளுக்கடையும் தீவைத்து எரிக்கப்பட்டன. பல பகுதிகளில் அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி சாய்த்தனர். தந்தி கம்பிகளும் வெட்டி எறியப் பட்டன. இதனால் ஆங்கிலேயர்களின் தகவல் தொடர்பு முடக்கப் பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் புகுந்து சரமாரியாக தாக்கி, பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவில்பட்டி தாலுகா கடலையூரில் கிராம மக்கள் வெயிலுகந்த முதலியார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் ஆங்கியேர்கள் வெயிலுகந்த முதலியாரை கைது செய்ய முயன்றனர். பொதுமக்கள் அவரை கைது செய்ய விடாமல் தடுத்தனர். அந்த இடம் போர்க்களமாக மாறியது.
வெள்ளையர்கள் சரமாரியாக கூட்டத்தினரை நோக்கி சுட்டனர். அதில் சிலர் உயிர் துறந்தனர். காயமடைந்தவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மறுநாள் அதிகாலையிலேயே ஊருக்குள் நுழைந்த ஆங்கிலேய சிப்பாய்கள் ஏரோளமானவர்களை கைது செய்தனர். ஆங்கிலேயர்கள் அப்போது தங்கள் பயன்பாட்டுக்காக ஆயுதங்களை போலீஸ் நிலையம், ரெயில் நிலையம், தபால் நிலையம், உப்பு அலுவலகம் ஆகியவற்றில் வைத்து பாதுகாத்து வந்தனர். அதை அறிந்த விடுதலை போராட்ட வேங்கைகள் ஆயுதங்களை கைப்பற்ற திட்டம் தீட்டினார். அதன்படி அரங்கேற்றப்பட்டது குரும்பூர் ரெயில் நிலைய தாக்குதலாகும்.
திடீரென்று ஒருநாள் நள்ளிரவில் குரும்பூர் ரெயில் நிலையம் தாக்கப்பட்டது. அங்கிருந்து 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. அதன்பிறகு ரெயில் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. இதே போன்று உடன்குடி அருகே உள்ள நங்கைமொழியில் விடுதலை போராட்ட இளைஞர்களின் ரகசிய கூட்டம் படுக்கப்பத்து மங்களா பொன்னம்பலம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம், மெஞ்ஞான புரம் தபால் அலுவலகத்தை தகர்க்க திட்டம் தீட்டினர். இதை அறிந்த ஆங்கிலேயர்கள் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினர். இதனால் மெஞ்ஞானபுரம் தபால் அலுவகத்தை தாக்கினர். அப்போது, தபால் அலுவலரும், விடுதலை போராட்ட வீரர்களும் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். அதை கேட்ட அந்த பகுதி மக்கள் கோவில் மணியை அடித்தனர். இதனால் ஊர் திரண்டு வந்தது. அப்போது போராட்டக்காரர்கள் எரி சாராயம் நிரப்பிய பாட்டிலில் தீவைத்து தபால் நிலையம் மீது வீசி தீக்கிரையாக்கினர். பின்னர் வந்தேமாதரம் கோஷத்தை எழுப்பி அங்கிருந்து சென்றனர். இந்த வழக்கில் ஆறுமுகநேரி தங்கவேல் நாடார், கே.டி.கோசல்ராம் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்
1966 இல் குலசேகரப் பட்டினம் வளம் பெற்ற நகரமாகவே இருந்துள்ளது. மணப்பாடு உட்பட இந்த நகரத்தின் மக்கள் தொகை 10,679 ஆகும். இது சிறு துறைமுகமாகச் சிறந்து விளங்கி நெடுங்காலம் புகழ்பெற்ற சிறு நகரமாகும். மரக்கலங்கள் பாய்விரித்துப் பெருமிதத்துடன் செங்கடலிருந்து ஜப்பான் வரை சென்று சிறப்புடைய துறைமுகமாக இருந்துள்ளது. திருச்செந்தூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது. 1905 முதல் 1930 முடிய பாரி கம்பெனியாரின் சர்க்கரை ஆலை நடைபெற்று வந்தது. சோமலே குலசேகரபட்டினம் சென்ற 1963 ல் இங்குசென்ற போது வெல்லம் காய்ச்சும் தொழில் பெரிய அளவில் நடந்தது.
1942&ம் ஆண்டு குலசேகரன்பட்டினத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த உப்பள சுதந்திரப் போர் ஒன்று நடந்துள்ளது. ஆனால், அது குறித்து இப்போது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அடக்குமுறையில் ஈடுபட்டு உள்ளூர் மக்களை அடிமையாக்கி உப்பளத்தில் வேலை வாங்கிய வில்பிரட் லோன் துரை என்ற ஆங்கில அதிகாரி போரிட்டு படுகொலை செய்து வீரத்தை நிரூபித்த இடம் குலசேகரப்பட்டினம். சுதந்திர போராட்டம் சூடுபிடித்த 1942ம் ஆண்டு காலத்தில் நடந்த நிகழ்வு அது. அந்தக் காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் உப்பளத் தொழில் சிறப்பாக நடந்தது. ஆனால், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட உப்புகள் அனைத்தும் இந்திய மக்களின் பயன்பாட்டுக்கு முழுவதும் பயன்படவில்லை. ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர்.
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த வில்பிரட் லோன்துரை என்பவர் மேற்பார்வையில், அந்த உப்பளம் செயல்பட்டு வந்தது. அவர் தங்குவதற்கு தனியாக அங்கு ஒரு பங்களாவும் இருந்தது. அந்த பங்களாவைத் துப்பாக்கி ஏந்திய ஆங்கிலேயர்கள் பாதுகாத்து வந்தனர். குலசேகரன் பட்டினத்தைச் சுற்றி உள்ள கிராம மக்களில் பலர் அங்கு அடிமையாக இருந்து உப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல ஆங்கில அதிகாரியின் அடக்குமுறை அதிகாரமானது. குலசேகரன்பட்டினம் உப்பு தொழிலாளர்களைக் கொடுமைப் படுத்தினர். அப்போதுதான் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. உப்பளத் தொழிலாளர்களும் வெகுண்டு எழுந்தனர். அவர்களின் கோபப் பார்வை அதிகாரி லோன்துரை மீது திரும்பியது.
வேல்கம்பு, அரிவாள், ஈட்டி, பெட்ரோல் போன்ற ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். அதிகாலை 3 மணி அளவில் லோன்துரை தூங்கி கொண்டிருந்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து தாக்குதல் நடத்தினர். 4 மணி நேரம் நடந்த போரின் முடிவில் லோன் துரை கொல்லப்பட்டார். “ஓ கடவுளே” என்று கூறி இறந்தார். இந்த தகவல் அறிந்த ஆங்கிலேய படைகள் குலசேகரன் பட்டினத்திற்கு வரவழைக்கப்பட்டன. சாலையில் வந்து சென்றவர்கள் மீது அவர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். வீடுகளில் புகுந்து சோதனை நடத்தினார்கள். வீட்டில் சிறு கத்தி இருந்தாலும் நடவடிக்கை எடுத்தார்கள். எச்சரிக்கை செய்தார்கள். லோன்துரை உடலைப் பிரேத பரிசோதனை செய்துவிட்டு, அவரது உடலில் 16 காயங்கள் இருந்ததாக தெரிவித்தார்கள்.
பின்னர் உடலை குலசேகரப்பட்டினம் ஊருக்கு வடக்கே உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். அவரது கொலை வழக்கில் 26 பேர் சேர்க்கப்பட்டனர். அனைவரும் திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். ஆங்கில படையினரிடம் பிடிப்பட்டவர்கள் பல இன்னலுக்கு ஆளானார்கள்.
லோன்துரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை அமைக்கப்பட்டது. இன்றும் அந்தக் கல்லறை எந்த சேதமும் இல்லாமல் உறுதியாக உள்ளது. குலசேகரன்பட்டினம் சென்றால் அந்த கல்லறையையும் அதில் குறிப்பிட்டு உள்ளவற்றையும் படிக்க முடியும்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 தியாகிகளின் நினைவாக ஒரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சில சமூக சேவர்கள் இந்த மண்டபத்தினை பராமரித்து வருகுறார்கள்.
லோன் துரை கொலையை சிலர் விரிவாக நாம் பேசலாம். அதில் யார்யார் எப்படி கலந்துகொண்டார்கள். யாருக்கு எத்தனை நாள் சிறைத்தண்டனை என்பது குறித்த தகவலை நாம் காணலாம்.
அதிகாலை 3 மணிக்கு குலசேக ரன்பட்டினத்தில் உள்ள உப்பு அலுவலகத்துக்குள் நுழைந்தனர். மந்திர கோனார் தலைமையிலான ஒரு பிரிவினர் உப்பு அலுவலகம் உள்ளே சென்று துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றுவது, ராஜ கோபாலன் தலைமையிலான குழுவினர் ஆயுதங்களுடன் அவர்க ளுக்கு பாதுகாப்பு தருவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினர். விடுதலை வீரர்கள் உப்பு அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த உப்பளத்தின் காவலர்களை தாக்கி ஆயுதங்களை கைப்பற்றினர். தொடர்ந்து அலுவலகத்தை தீக்கிரையாக்கினர். இதை அறிந்த உப்பு உதவி ஆய்வாளரான வடக்கு ஸ்காட்லாந்தை சேர்ந்த வில்பர்ட் லோன் துரை துப் பாக்கியுடன் உப்பு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஆங்கிலேய அதிகாரி லோன்துரையின் கல்லறை தற்போது உள்ள இடத்தில் வைத்து விடுதலை போராட்ட வீரர்களுக்கும், லோன் துரைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் விடுதலை வீரர்களின் தாக்குதலில் 64 காயங்களுடன் லோன் துரை பிணமாக சரிந்தார். இது குலசேகரன்பட்டினம் சதிவ ழக்கு என்று குறிப்பிடப்பட்டு உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்த வழக்கில் 115 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 61 பேர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நெல்லை குற்றவியல் கோர்ட்டு சிறப்பு நீதிபதி பாலகிருஷ்ணய்யர் முன்னிலையில் நடந்தது. 1942 அக்டோபர் மாதம் தொடங்கிய வழக்கு விசாரணை 1943ஆ-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முடிவடைந்தது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ராஜகோபாலன், 2-வது குற்றவாளியான காசிராஜன் என்ற ராமலிங்க நாடார் ஆகியோ ருக்கு தூக்கு தண்டனையும், 3-வது குற்றவாளியான பெஞ்சமி னுக்கு 3 ஆயுள் தண்டனையாக 100 ஆண்டு சிறை தண்டனையும், ஆர்.செல்லத்துரை, மந்திரம், தர்மம் கோயில்பிள்ளை, தங்கையா நாடார், சிவந்திக்கனி என்ற முத்துமாலை நாடார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தேவஇரக்கம் நாடாருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், மோட்டார் என்ற ரத்தினசாமி, பூவலிங்கநாடார் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை, காசிநாடார், லட்சுமணநாடார் ஆகியோருக்கு பாதுகாப்பு கைதி என்றும் தண்டனைகள் வழங்கப்பட்டன.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட காசிராஜனும், ராஜகோபாலும் பல்வேறு கோர்ட்டுகளில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அவர்க ளுக்கு பலன் கிடைக்கவில்லை. மூதறிஞர் ராஜாஜி, 2 பேரின் விடுதலைக்காக முயற்சி செய்தார். டெல்லி உச்சநீதிமன்றம், பிரிட் டன் கவுன்சில் ஆகியவற்றிலும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடைசியாக இந்திய வைசிராயாக இருந்த வேவல்பிரபுக்கு கருணை மனுவை ராஜாஜி நேரில் சென்று கொடுத்தார். அவரது வேண்டு கோளை ஏற்று, தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. 1946-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் இடைக்கால டி.பிரகாசம் மந்திரி சபையில் சென்னை மாநில முதல்-அமைச்சராக பதவியேற்றார். உடனடியாக சிறையில் இருந்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களும் 4.-4.-1946 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.
(தொடரும்)


