மதர் சமூக சேவை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முன்னேற்றத்திற்க்காகவும், கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.
மக்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நெற்குன்றம், கோல்டன் ஜார்ஜ் நகரில் திட்ட அலுவலகம் (கிளை) திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவனத்தின் தலைவர் டேனியல் மோசஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் எழுவை சுதாகர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் டாக்டர்.சதாசிவம் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக இயக்குனர் டாக்டர் கென்னடி அனைவரையும் வரவேற்றார். இதில் அண்ணாநகர் தொழிலதிபர்கள் சசிகுமார், ஆனந்த் மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரின்ஸ், காளி, ஞானராஜ், சரவணன், சாந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


