கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்தில் பேசியதாக முதியவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கடலையூா், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் எட்வா்டு (72). இவா் கோவில்பட்டியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் நின்றிருந்த 16 வயது பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்துடன் பேசினாராம். புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து எட்வா்டை கைது செய்தனர்


