தூத்துக்குடியில் வருகிற 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தி.மு.க வடக்கு மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தாெடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க பிரதிநிதிகள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கலைஞர் அரங்கத்தில் வைத்து மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி, கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


