தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனா்.
கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தக்காளி உற்பத்தி குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை திடீரென அதிகரித்து மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இடையிடையே ஒரு சில நாள்கள் மட்டும் விலை சற்று குறைந்த போதும், தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.
இந்த நிலையில் இன்று தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தக்காளி மொத்த விலையில் ரூ.10 அதிகரித்து ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனா். தக்காளி விலை அதிகரிப்பு ஒருபுறமிருக்க, பிற காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனா். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


