தூத்துக்குடி சிவன் கோவில் பின்புறம் மின்விளக்கு அமைத்து கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு இந்து முன்னணி நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் பின்புறம் மின்விளக்கு அமைத்துக் கொடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கும், முயற்சி செய்த திருக்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


