தூத்துக்குடி கதிர்வேல் நகரில் தனியார் நிலத்தில் தேங்கிய தண்ணீருக்குள் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த இடத்தின் உரிமையாளரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக இதுபோன்ற தனியாருக்கு சொந்தமான பள்ளமான இடங்களில் மணல் கொண்டு நிரப்பி நீர் தேங்காதவாறு பலமுறை அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். ஆகவே இதுபோன்ற சம்பவங்கள் மாநகரில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் மீண்டும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


