எங்களுடைய முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் இணைச்செயலாளராகவும் பணிபுரிந்து வரும் உயர்திரு லெட்சுமிபதி அவர்களை மரியாதை நிமித்தமாக தலைமை செயலகத்தில் சந்தித்தேன். என்னுடன் சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவரும், சிஷ்யன் காமராசு செல்வனும் உடன் வந்தனர். நாங்கள் வருகிறோம் என்றவுடன் அவரது உதவியாளரை அனுப்பி வாயிலில் இருந்தே எங்களை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தார். அய்யாவின் அறை முதலமைச்சர் அறையின் அருகிலேயே இருந்தது. நாங்கள் வந்தவுடன் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். அய்யா தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியை மருதூர் அணையில் துவக்கி வைத்து விட்டு வந்திருந்தார்கள். அந்த பணியை நாங்கள் தற்போது ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை பகுதியில் நடத்தி முடித்துள்ளோம். எங்களுக்கு தற்போதைய மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அய்யா அவர்களும் உதவியிருந்தார். அந்த தகவலையும் அவரிடம் கூறினோம். மேலும் எழுத்தாளர்களை சுதந்திர தினவிழாவில் அய்யா அறிமுகம் செய்தது, புத்தக கண்காட்சி கூட்டத்தினை நடத்தியது , வெள்ளக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அவர்கள் பணியாற்றிய தருணங்கள் உள்பட பல விசயங்களை பேசினோம். எங்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்தார். நான் பொன்னாடை போர்த்தி என்னுடைய ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள் நூலை பரிசாக கொடுத்தேன். சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க காலண்டரை, சைமன் அய்யா வழங்கினார்கள். சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் எங்களுக்கு நேரம் ஒதுக்கி , எங்களை சந்தித்த அய்யாவுக்கு மிக்க நன்றி. தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணிக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து விட்டு விடைபெற்றோம். அவரோடு இருந்த சுமார் 30 நிமிடம், தாமிரபரணி நதிக்கும் எங்களுக்கும் மிக முக்கியமான தருணமாக இருந்தது. – முத்தாலங்குறிச்சி காமராசு


