தூத்துக்குடியில் அற்புதம் ஆயில் ஸ்டோர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில், காய்கனி மார்க்கெட் வளாகத்தில் அற்புதம் ஆயில் ஸ்டோர்ஸ் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி வெஜிடேபிள் மார்க்கெட் மேனேஜர் எஸ்டிஎஸ் மணி ராஜ் தலைமை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல பேராயர் எஸ்இசி தேவசகாயம் ஜெபம் செய்து அற்புதம் ஆயில் ஸ்டோர்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார்.
அற்புதம் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கிரேஸ் மருத்துவமனை டாக்டர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை அற்புதம் குழுமங்களின் நிர்வாக அதிகாரி ஜெபன் மற்றும் மேலாளர் ரூபன் சிங் ஆகியோர் செய்திருந்தனர்.
திறப்பு விழா நிழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் மகேஷ் ராம், டாக்டர் கந்தசாமி, டாக்டர் மாரிமுத்து, டாக்டர் அலாய், டாக்டர் முத்துராமன், ஆத்தூர் மணி குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வன், வழக்கறிஞர் கிஸிங்கர், மார்க்கெட் மேலாளர் நியூட்டன், அற்புதம் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அற்புதம் ஆயில் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தரமாகவும் நியாயமான விலையிலும் கிடைக்கும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


