தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தலில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகள் தேர்தல் மணி நகரில் உள்ள வர்த்தக சங்க அலுவலகத்தில் நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஜெ. ஜவகர் பொதுச் செயலாளர் பதவிக்கு தெர்மல் ராஜா பொருளாளர் பதவிக்கு ஆர். விக்னேஷ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தேர்தலில் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்துக்கு உட்பட்ட 54 கிளை சங்கங்களை சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மத்திய சங்க பிரிதிநிதி என ஒரு கிளை சங்கத்திற்கு 4பேர்கள் வீதம் மொத்தம் 216 பேர் வாக்காளர்கள் ஆவார்கள். தேர்தலில் இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ததால் 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் எம்.சொக்கலிங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான சான்றுகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், தமிழ்நாடு வணிகர்கள் சங்க செயல் தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி, முன்னாள் செயலாளர் பாஸ்கரன் பொருளாளர் ராஜலிங்கம் டி.ஏ. சில்க்ஸ் அதிபர் டிஏ தெய்வநாயகம் சுண்ணாம்பு கடை சந்தனராஜ், பொன்.தினகரன் ஆனந்த சேகரன் கணபதி ஜெபஸ்யான் அன்னராஜ் தர்மராஜ், பாரகன், அந்தோணி, முத்து உள்பட கிளை சங்கங்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


