தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் சுமார் நள்ளிரவு 2 மணி வரை மழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் நேற்று பெய்த கனமழையால் பி அன்டு டி காலனி, புஷ்பா நகர் மற்றும் கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். மேலும் மழைநீரை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். ஆய்வின் போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்டக் செயலாளர் பொன்னுச்சாமி, மாமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


