புன்னைக் காயலில்தான் முதல் அச்சுக்கூடம் இருந்ததாகவும். 1586 இல் அந்த அச்சுக்கூடத்தில் “அடியார் வரலாறு” நூல் அச்சிடப்பட்டது எனவும். அதனை தமிழக அரசு ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் புன்னையம்பதி ஊர்க் கமிட்டி சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அச்சுக்கூடத்தின் வரலாறை கேட்டதோடு, நூலைப் படித்து அறிந்துகொண்டார். நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.ஊர்த்தலைவர் அமல்சன், பஞ்சாயத்து தலைவி சோபியா மற்றும் ஊர்மக்கள் உடனிருந்தனர்.


