தூத்துக்குடி, நாசரேத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி பி அன் டி காலனி 4வது தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (25). இவர் 12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி தேடி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் வடிவேல் மகன் முத்துக்குமார் (48). பெயிண்டர். இவர் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திரா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வருகிறார்.


