கோவில்பட்டி அருகே மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அய்யம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி ஆவுடைத்தாய் (39). நேற்று காலை தனது வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
அவரை அவரை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


