தூத்துக்குடி சிவன்கோவில் தலைமை பட்டர் செல்வம் இல்ல விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
தூத்துக்குடி மாநகாில் பிரதிபெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிாியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை பட்டர் கல்யாணசுந்தரம் என்ற செல்வம் பட்டர் – ஸ்ரீமதி பரமேஸ்வாி ஆகியோரது குமாரர்கள் ராஜஸ்ரீவர்த்தன், கைலாஷ் அபி வர்த்தன், சண்முகசுந்தரம் பட்டர் ஸ்ரீமதி சண்முகபிாியா ஆகியோரது குமரன் குருகுஹன் ஆகியோரது உபநயன ப்ரம்மோபதேச சிவ தீக்ஷா விழா தூத்துக்குடி அழகர் மஹாலில் நடைபெற்றது.
விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பிள்ளையார் பட்டி சிவநெறிக் கழக ஸ்தாபகர் பிச்சை சிவாசாா்யார், திருப்பரங்குன்றம் ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயம் முதல்வர் ராஜாபட்டர், லண்டன் நாகநாத சிவாசார்யார், பெங்களுர் குருகுலம் பேராசிாியர் சுந்தரமூர்த்தி சிவாசார்யாா், மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாசார்யாா், காரைக்கால் ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாசார்ய வேதசிவாகம வித்யாபீடம் முதல்வர் ஸர்வேச்வர சிவாசார்யார், சென்னை ஒய்வு ஆசிாியர் அபிராம சுந்தர சிவாசார்யார், சிவாம வித்வான்கள் காளிதாஸ் சிவாசார்யாா், ராஜாசுவாமிநாத சிவாசார்யார், கல்யாணசுந்தரம் சிவாசார்யார், நீலகண்ட சிவாசார்யார், உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
முன்னதாக சிவவித்யா பாிபாலன் சங்கம் சாா்பில் திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா சிவன்கோவில் தலைமை பட்டா் கல்யாண சுந்தரம் என்று செல்வம் பட்டர் வெளியிட்டார். கண்ணன் பட்டர் நன்றியுரையாற்றினார்


