கோவில்பட்டியில் குடும்ப பிரச்சனையில் மனமுடைந்த வாலிபர், சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன் (38), இவர் இன்று அதிகாலை 1 மணி அளவில் கடம்பூர் அருகே மதுரைக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி சண்முகத்தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் முருகன் கடந்த ஒரு வருடமாக மனைவியை பிரிந்து தனியாக இருந்தும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெற்றவர் தொடர்ந்து சிகிச்சை எதுவும் பெறாமல் இருந்துள்ளார். மேலும் நேற்று அவரது தந்தைக்கு போன் செய்து நான் சாகப் போகிறேன் என்று கூறிய நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.


