புவேர்ட்டோ ரிக்கோ, என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும்.
இது வடகிழக்கு கரிபியனில் டொமினிக்கன் குடியரசுக்கு கிழக்கேயும் வேர்ஜின் தீவுகளுக்கு மேற்கேயும் புளோரிடா மாநிலக் கரையில் இருந்து 1,280 மைல்கள் (2,000 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் முக்கிய தீவு புவேர்ட்டோ ரிக்கோவாகும். இதைவிட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது.
புவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.


