தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே மின்சாரம் தாக்கி மயில் இறந்து போனது.
தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெரு அருகே உள்ள காட்டு பகுதியில் மயில் ஒன்று, உயர்அழுத்த மின் ஒயரில் மோதியதில், மின்சாரம் தாக்கி பலியானது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த மயிலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் மயில் உடலை காட்டுப்பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர்.


