ஏ.கந்தசாமிபுரம் கிராமத்தில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் பேரிலோவன்பட்டி காசநோய் பிரிவு ஏ.கந்தசாமிபுரம் கிராமத்தில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஆற்றங்கரை ஊராட்சி மன்றத் தலைவர் சீதாராமன், விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் தன்னார்வலர் ஸ்ரீராமர் , ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் ராஜசேகர், கிராம சுகாதார செவிலியர் சைனி சாராள், முதுநிலை சிசிக்சை மேற்பார்வையாளர் கணேசமூர்த்தி, சுகாதார பார்வையாளர் அமுதா, இடைநிலை சுகாதார பணியாளர்கள் ரம்யா, கலாலட்சுமி, ரஞ்சனி, ஆனந்தராணி, உஷா லட்சுமி, செல்வி கங்காதேவி, மற்றும் MTM சுகாதார தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


