பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தமிழ் மன்றம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொருநை கடந்து வந்த நாகரிகங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசுகிறார்.
கல்லூரியின் லெபோ அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் அருட்தந்தை முனைவர் மரியதாஸ் தலைமை தாங்குகிறார். இணை முதல்வர் முனைவர் சேவியர் இன்னோசன்ட் முன்னிலை வகிக்கிறார். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவர் ஜெனி ஆண்டனி வரவேற்று பேசுகிறார். நிகழ்ச்சியை இளங்கலைத்தமிழ் முதலாமாண்டு மாணவி பானுமதி தொகுத்து வழங்குகிறார். பொருநை கடந்து வந்த நாகரிகங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் இக்னேஷியஸ் சேவியர், ஒருங்கிணைப்பாளர் முனைவர் முருகன், பொறுப்பாசிரியர் முனைவர் டெய்சி உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி சகாய ஆன்றோ ஜாய் ரோஷன் நன்றி கூறுகிறார்.


