தமிழகத்தில் பாராளுமன்றத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக இன்று மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டு அனைத்து மக்களின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. இந்த காரணத்திற்காகத்தான் அந்த ஆட்சியை அகற்றி விட்டு இந்தியா கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணியில் உள்ள கட்சியினர் ஆட்சியில் இருந்தால் தான் மக்களுக்கு நன்மை. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் பேசினார்.


