ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நேற்று திடீர் காற்றுடன் கூடிய மழை பெய்தது இதனால் இப்பகுதியில் உள்ள வாழைகள் சேதமடைந்தன விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றி அதிக அளவில் வாழைகளை பயிரிட்டுள்ளனர் மழையுடன் கூடிய திடீர் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு வாழைக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதிகளில் தாமிரபரணி பாசனத்தை நம்பி சுமார் 46ஆயிரத்து 107ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நெல் பயிருக்கு மாற்றாக வாழை சாகுபடி செய்துவரும் விவசாயிகளும் விளைவிக்கப்படும் வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காமல் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புயல்&மழைக்காலங்களிலும், திடீரென்று வீசும் சூறைக்காற்று காலங்களிலும் வாழை விவசாயிகள் வாழைகளை பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் நிலையும் காலம்காலமாக தொடர்கிறது.
இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட வாழைத்தோட்டங்களை வருவாய்த்துறையினர் நேரில் பார்த்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு சரியான முறையில் நிவாரணம் கிடைக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்தது. இந்த திடீர் சூறைக்காற்றினால் தாமிரபரணி பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீமூலக்கரை, பேரூர், திருப்புளியங்குடி, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், பத்மநாபமங்கலம், தோழப்பண்பண்ணை, நளராஜபுரம், மங்கலக்குறிச்சி, வெள்ளூர், கருங்குளம், இருவப்பபுரம், உள்ளிட்ட பல பகுதிகளில் வாழைமரங்கள் முறிந்து விழுந்து சேதமாகியுள்ளது. வாழைத்தார்கள் விளைச்சலுக்கு வர இருந்த நிலையில் வாழைகள் முறிந்து சேதமாகியுள்ளதால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு வாழை ஒன்றுக்கு குறைந்தது ரூ.100முதல் ரூ.200வரை இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.


