தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள்,மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கீதாஜீவன் ,அனிதாராதாகிருஷ்ணன் முன்னிலை வைத்தனர் .நிகழ்ச்சியில் கல ந்துகொண்டு 52 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:- இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது மிகவும் மன நிறைவு தருகிறது. நரிக்குறவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு செய்து தரவேண்டும்
என்று கோரிக்கை வைத்த நேரத்தில் வெள்ளம் ஏற்பட்ட காலகட்டத்தில் உங்களுக்கு தேவையான உதவிகள் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் செய்யப்பட்டன . தேர்தல் காலகட்டத்தில் ஓட்டு போடும் உரிமை இல்லாமல் இருந்தது ஆனால் கடந்த முறை ஓட்டு போடும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது. இதற்காக நான் மாவட்ட ஆட்சித்
தலைவரை மனதார பாராட்டுகிறேன். அதுபோல மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட உங்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதில் தமிழக முதலமைச்சர் முன்னிலை பெற்று வருகிறார்.மாற்றுத்திறனாளிகளின் 10 ஆண்டு கோரிக்கைகளை முன்பு இருந்த யாரும் செவிசாய்க்கவில்லை. உங்களுடைய கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாக இந்த அதிமுக அரசு உள்ளது மாற்றுத்திறனாளிகளின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் ஆட்சியாக தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி உள்ளது. முன்பெல்லாம் பெண்கள் 13 வயது 15 வயதில் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள்.ஆனால் தற்போது படித்து சாதனை நிகழ்த்த வேண்டும் என்று பெண்கள் உறுதியாக உள்ளனர். நம்முடைய அமைச்சர் 2 டிகிரி பெற்றுள்ளார் மாநகராட்சி ஆணையர் ஒரு பெண்தான் ஐஏஎஸ் படித்துள்ளார். பெண்கள் படிப்பில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் திருமண உதவி திட்டத்தை ஆயிரம் ரூபாய் வழங்கும் கல்வித் திட்டமாக நம்முடைய முதலமைச்சர் மாற்றியுள்ளார். பெண்கள் யாருக்கும் திறமை இல்லை என்று நினைக்க வேண்டாம் எல்லோருக்கும் திறமை உள்ளது . சமூகத்தில் ஆண்கள் பெண்கள் இருவரும் சமம் என்பதை உணர்ந்து படித்து முன்னேற வேண்டும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன்,ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டனர்.


