மும்பையில் செயல்பட்டு வரும் செந்தூர் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் தமிழ் புத்தாண்டு விழா நடந்தது.
மும்பை முலுண்ட் மேற்கு வித்யா மந்திர் வளாகத்தில் நடந்த விழாவில் தமிழ்களின் கலாச்சாரத்தினை மேம்படுத்தும் விதமாக தமிழக் காலந்தேர்( நாள்காட்டி) வெளியீட்டு விழா நடந்தது. வணிக துறை அதிகாரி சுரேஷ் பெரியசாமி தலைமை வகித்தார். செந்தமிழ் தமிழாய்வு அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் செந்தூர் நாகராஜன் வரவேற்றார். தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் என்ற தலைப்பில் தமிழ்ச்செம்மல் கலை நன் மணி தொல்லியியல் ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த தமிழ் காலண்டர் குறித்து செந்தூர் நாகராஜன் கூறும் போது, காலண்டர் என்பது காலந்தேர் என்ற தமிழ் வார்த்தையின் மரு உருவே. ஆகவே தான் இந்த காலண்டருக்கு காலந்தேர் என பெயர் வைத்துள்ளோம். இந்த காலண்டர் ஆங்கில காலண்டரில் ஜனவரி என்று ஆரம்பிப்பது போலவே சித்திரையில் இருந்து ஆரம்பிக்கிறது. முதல் , இடை, கடை தமிழ்சசங்கத்தின் வருடங்களை கணக்கிலிட்டு தற்போது தமிழ் ஆண்டை 12173 என குறிப்பிட்டுள்ளோம். எனவே தமிழ் தான் மிகவும் பழமையான மொழி என்பதும், உலகத்தின் உன்னத மொழி என்பதும் நிருபணம் ஆகிறது. சோப கிருது என்று வடமொழியில் ஆரம்பிக்கப்படும் இந்த வருடத்தினை இராஜஇராஜன் வருடம் என குறிப்பிட்டுள்ளோம். மிகவும் பழமையான நமது மொழியின் பெருமை உலகில் உள்ள அனைத்து தமிழர்களிடமும் போய் சேர வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநிலத்தினை சேர்ந்த முருகன், ஆதிதிராவிடர் நலச்சங்கத்தினைசேர்ந்த அசோக்குமார், நாடார் சங்கத்தினை சேர்ந்த ராஜன், மும்பை பாண்டூப் மாயாண்டி நாடார், பூதபாண்டியன், லெட்சுமணன், உள்பட பலர் கலந்துகொண்டனர். மந்திர மூர்த்தி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கவிஞர் செந்தூர் நாகராஜன் தலைமையில் மாயாண்டி, செந்தில், விஜயலெட்சுமி, கோமதி, சாந்தா லெட்சுமி, இரமேஷ்குமார், எல். பாஸ்கரன், இராஜலிங்கம், முத்து, இராஜகுரு உள்பட செந்தூர் தமிழாய்வு அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
தாயகத்தில் இருந்து மும்பை வந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு மும்பை ஏற்போர்டில் வ்ரவேற்பு அளிக்கப்பட்டது. செந்தூர் நாகராஜன், மாயாண்டிநாடார், பவுல் உள்பட பலர் கலந்துகொண்டு அவரை வவேற்றனர்.

காட்கோபர் அய்யா வழி கோயிலில் வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கௌரவிக்கப்பட்டார். எஸ்.பி.அய்யா தலைமையில் கவிஞர் ஆறுமுகபாண்டியன், லெட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


