பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் நெல்லை படைப்பாளர் அரங்கில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
வெளியீட்டு விழாவிற்கு புத்தனேரி செல்லப்பா தலைமை வகித்தார். தமிழ்ச்செம்மல் பாமணி, ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூலை பாப்பாக்குடி செல்வமணி வெளியிட முதல் நூலை நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான் பெற்றுக் கொண்டார்.புலவர் வை.ராமசாமி, சிற்பி பாமா முனைவர் ஜோசப்ராஜ், முனைவர் கந்தசுப்பு, கவிஞர் ஜெயபாலன், கவிஞர் சுப்பையா, ஆசிரியர் ஆவுடையப்ப குருக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார்.


