தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் தலைமை வகித்தார். மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் கோ.அன்னலெட்சுமி முன்னிலை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் பானை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கோட்டுராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறினார்.
அதன்பின் மாணவ, மாணவ மாணவியர்களின் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சியும், அவரவர் வகுப்பறையில் பொங்கல் திருவிழா கண்காட்சி போட்டியும் நடைபெற்றது. அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களையும் மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் ரா.ச.பிரியங்கா பொங்கல் வாழ்த்துக் கூறி நன்றி உரையாற்றினார். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.


