பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளியில் அஸ்ட்ரோ க்ளப் துவக்கவிழாவும் கோள் திருவிழாவும் (ஜன 11.2024) திருநெல்வேலி அஸ்ட்ரோ க்ளப் சார்பில் நடைபெற்றது. விழாவில் தாஸ் மாநில செயற்குழு உறுப்பினர், டாக்டர் முத்துசாமி திருநெல்வேலி அஸ்ட்ரோ க்ளப் ஒருங்கிணைப்பாளர், பொன் இசக்கி மாவட்ட அஸ்ட்ரோ கருத்தாளர் மற்றும் சாமிதாஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
தலைமையாசிரியர் அருட்சகோ கனீஸ்பீட்டர் தலைமைதாங்கினார்,பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அருட்சகோதரர் அலெக்சிஸ் அந்தோனி வரவேற்றார் , பள்ளி அஸ்ட்ரோ க்ளப் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு விமலன் நன்றியுரைத்தார். 1400 மாணவர்கள் டெலஸ்கோப் மூலம் தொலைவில் உள்ள காட்சிகளை காண பயிற்சி பெற்றார்கள். உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் ஒருங்கிணைத்தார்கள். மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் முத்துசாமி கூறியதாவது ,தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி(TASS) சார்பில் 2024ம் வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2024 இடங்களில் வானியல் நிகழ்வுகளை கொண்டு செல்ல கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது.


